ரு மனிதரின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 3-ஆவது பாவம் கெட்டுப் போயிருந்தால் அல்லது சந்திரன் பலவீனமாகவோ நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்து, அந்த சந்திரனுக்கு சனியின் பார்வை இருந்தால் அவருக்கு ஜலதோஷம் பிடிக்கும். நுரையீரலில் பிரச்சினை உண்டாகும். மூச்சு விடுவதில் சிக்கல் இருக்கும்.

Advertisment

ஒரு மனிதரின் உடலை 12 ராசிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதில் மூன்றாவது பாகமான மிதுனம் நுரையீரலைக் குறிக்கிறது. அந்த மிதுனத்தில் பாவ கிரகம் இருந்து, அதை இன்னொரு பாவ கிரகம் பார்த்தால், அவருக்கு சந்திர தசையில் அந்த பாவ கிரகத்தின் அந்தரம் நடந்தால் சுவாசப் பிரச்சினை இருக்கும். சிலருக்கு நுரையீரலிலில் கட்டி உண்டாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் பலவீனமாக இருந்து, 6-ஆம் பாவத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகருக்கு வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களும் வந்துசேரும்.

dd

Advertisment

பித்தம் காரணமாக சிலருக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும். நடக்கும் போது, மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.

நுரையீரலிலில் பிரச்சினை ஏற்படும். சிலர் கடுமையான தலைவலியால் பாதிக்கப்படுவார்கள்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 3-ல் சந்திரன், 7-ல் சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு மாரகாதிபதியின் தசை அல்லது சந்திர தசை நடக்கும்போது அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படும். நுரையீரலிலில் பாதிப்பு உண்டாகும்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் மிதுனத்தில் கேது, செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகருக்கு செவ்வாய் தசையில் சனியின் அந்தரம் நடக்கும்போது சுவாச நோய் ஏற்படும்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்துசேரும்.

ஒரு மனிதரின் ஜாதகத்தில் 8-ஆம் பாவத்தில் குரு, சனி இருந்தால், அவருக்கு செவ்வாய் தசை நடக்கும்போது, அந்த செவ்வாய் 3, 6 அல்லது 12-ல் இருந்தால், அந்த மனிதருக்கு நுரையீரலிலில் பிரச்சினை உண்டாகும்.

நுரையீரலி ல் கட்டி வருவதற்கும் வாய்ப் பிருக்கிறது.

ஒருவருக்கு 2-ஆம் பாவத்தின் தசை நடக்கும் போது, அந்த தசையின் அதிபதி 6-ஆம் பாவத்திலோ 8-ஆம் பாவத்திலோ இருந்தால், அந்த மனிதருக்கு நோய்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த தசை நடக்கும்போது, சந்திர புக்தி அல்லது சனி புக்தி நடந்தால், அந்த மனிதர் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவார். சிலருக்கு நுரையீரலிலில் கட்டி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

சிலருக்கு மூச்சுக் குழாயில் பிரச்சினை உண்டாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், சனி, புதன் இருந்தால், அவருக்கு 8-ஆம் அதிபதியின் தசை நடக்கும் போது, சனியின் அந்தரம் நடந்தால் அந்த ஜாதகருக்கு நுரையீரலில் பிரச்சினை ஏற்படும். ஜீரணக் கோளாறு உண்டாகும்.

அதன்காரணமாக மூச்சு விடுவதில் அவருக்கு பிரச்சினை ஏற்படும்.

ஒரு மனிதரின் ஜாதகத்தில் லக்னாதிபதி, 12- க்கு அதிபதியுடன் 12-ல் இருந்து, அதை சனி பார்த்தால், அவருக்கு சரியாகத் தூக்கம் வராது.

அதனால் அவருக்கு பித்த நோய் வந்து சேரும்.

அதன்காரணமாக அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படும்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு அதிபதியான புதன் அஸ்தமனமாக இருந்து, அந்த புதனை சனி அல்லது செவ்வாய் பார்த்தால் அந்த ஜாதகருக்கு கடுமையான ஜலதோஷம் உண்டாகும். அடிக்கடி மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படும்.

3-ஆம் பாவத்தில் சந்திரன், புதன், சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு பிறக்கும் போதிலிருந்தே சுவாசப் பிரச்சினை இருக்கும். அவருக்கு6-ஆம் அதிபதி அல்லது 8 -ஆம் அதிபதியின் தசை நடக்கும்போது, 2-ஆம் அதிபதியின் அந்தரம் நடந்தால், அந்த ஜாதகருக்கு இதய நோய், மூச்சுத் திணறல் ஆகியவை உண்டாகும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன், புதன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், அந்த ஜாத கருக்கு ஏழரைச் சனி நடக்கும்போது, சந்திர தசை நடந்தால் அந்த ஜாதகருக்கு சுவாசப் பிரச்சினை உண்டாகும்.

நுரையீரலிலில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு நீண்ட நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். சிலருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சிலர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுவார்கள்.

ஒரு ஜாதகத்தில் புதன் அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவர் வசிக்கும் வீட்டின் வடகிழக்கில் பூஞ்செடிகள் அல்லது பூந்தொட்டிகள் இருந்தால் அவருக்கு சுவாசப் பிரச்சினை இருக்கும். புதன் அஸ்தமனமாக இருந்து, சந்திரன் பலவீனமாக இருந்து, வீட்டின் வடகிழக்கில் கழிவறை அல்லது குளியலறை இருந்தால் அந்த வீட்டில் வசிப்பவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை இருக்கும்.

ஒரு வீட்டின் வட கிழக்கில் அவசியமற்ற பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தால் அல்லது குப்பைத் தொட்டி இருந்தால் அங்கு வசிப்பவருக்கு சுவாசம் விடுவதில் பிரச்சினை இருக்கும்.

ஒரு வீட்டின் பிரதான வாசல் தென் கிழக்கில் இருந்து, தெற்கு மத்தியப் பகுதியில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு இருந்து, அந்த வீட்டின் வடகிழக்கில் கழிவறை இருந்தால் அங்கு வசிப்பவருக்கு சுவாசம் விடுவதில் பிரச்சினை இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். நுரையீரளலில் புற்று நோய் உண்டாவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது.

பரிகாரங்கள்

சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் கழுத்தில் முத்து பதித்த டாலர் அணிய வேண்டும். சுண்டு விரலிலில் முத்து பதித்த மோதிரத்தையும் அணியலாம்.

மேற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.

வீட்டின் வடகிழக்கைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

படுக்கையறையில் காற்று நன்கு வரக்கூடிய வசதிகள் இருக்கவேண்டும். தினமும் காலையில் குளித்து முடித்து சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். நீரில் சுக்கு, மிளகு போட்டு கொதிக்க வைத்து, வெல்லம் சேர்த்து அதைப் பருக வேண்டும். சிவனின் மகாமிருத்யுஞ்ஜய யந்திரத்தை வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

தினமும் காலையிலும் மாலையிலும் அரைமணி நேரம் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.

இரவில் சாப்பிட்டவுடனேயே படுக்கக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துதான் படுக்கவேண்டும்.

சனிக்கிழமை சாயங்காலம் அரச மரத்திற்கு தீபமேற்றி வணங்குவது நல்லது.

செல்: 98401 11534